பீகார் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலிபக்சர்: பீகார் மாநிலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் ராஜ்பூர் காவல்நிலையத்துக்குள்பட்ட அரியாபூர் கிராமத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சாலை ஓரத்தில் மணல், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை வைப்பது தொடர்பாக இருகுழுவினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் முற்றிய நிலையில், இருதரப்பினரும் துப்பாக்கியால் ஒருவரையொருவர் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த 5 பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விநோத் சிங், வீரேந்திர யாதவ் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர். உயிரிழந்த மற்றொரு நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.
The post பீகார் துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி appeared first on Dinakaran.