பாட்னா:பீகார் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜன்சுராஜ் கட்சி தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரஷாந்த் கிஷோர் கூறுகையில்,’ பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றும் ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது. நிர்வாகத்தை குழப்பிவிட்டார்கள். மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். நிதீஷ் குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்ஸில் இருக்கிறார்.
பாஜ மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக தொடர அனுமதிக்காது. மேலும் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்காது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமார் முதல்வராக முடியாது. அதனால் அவர் பீகார் முதல்வராக அடுத்த ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பார். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
The post பீகார் தேர்தலுக்கு பின்னர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆக மாட்டார்: பிரசாந்த் கிஷோர் உறுதி appeared first on Dinakaran.