புதுச்சேரி: மழையால் சேதமான பொருட்களுடன் எம்எல்ஏ தலைமையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளிடம் எம்எல்ஏ பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினார்.
புதுச்சேரியில் புயல் மழையால் பல பகுதிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டது. உப்பனாறு வாய்க்காலில் அதிக நீர் வந்ததால் நகரப்பகுதிகளில் கரையோரம் இருந்த உருளையன்பேட்டை தொகுதி கடும் பாதிப்புக்கு ஆளானது. குறிப்பாக இளங்கோ நகர், சாரதி நகர், சாந்தி நகர் உட்பட பல பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பொருட்களும் சேதமடைந்தன. இந்நிலையில் முதல் அமைச்சர் ரங்கசாமி ரேஷன்கார்டு தாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் அறிவித்தார்.