சென்னை: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பதிவாளரை பணி நீக்கம் செய்தது செல்லாது எனக்கூறியுள்ள உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பதிவாளராக நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக இருந்த பதிவாளர், நிதி அலுவலர், தேர்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பணியிடங்களை நேரடி நியமனம் அல்லது பிரதிநிதித்துவ (டெபுடேஷன்) அடிப்படையில் நியமிக்க கடந்த 2017-ம் ஆண்டு டிச.15 அன்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அதன்படி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய சசிகாந்த தாஸ் இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 2018 ஜூலை 5-ம் தேதி முதல் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.