புதுச்சேரி: புதுச்சேரி மதகடிப்பட்டு மேம்பாலத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். ஜிப்மரில் சிகிச்சை பெறும் தனது உறவினரை பார்ப்பதற்காக தலைமைக் காவலர் பிரபாகரன் காரில் சென்றுள்ளார். தனது குடும்பத்தினருடன் காவலர் பிரபாகரன் காரில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்டது. விபத்தில் தலைமைக் காவலர் பிரபாகரன், கார் ஓட்டுநர் சந்திரன், முகிலன், கதிரவன் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த காவலரின் மனைவி ஏஞ்சல் உள்பட 3 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post புதுச்சேரி மதகடிப்பட்டு மேம்பாலத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவலர் உள்பட 4 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.