சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. ஆனால், பல மாவட்டங்கள் மழை பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. தொடர் மழை விடுமுறையால் பாடத்திட்டத்தை முடிப்பதற்கும் போதிய கால அவகாசம் இல்லை. எனவே, தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.