டெல்லி: உத்திரப்பிரதேசத்தில் இரண்டு கைம்பெண்கள், சிறுபான்மை வழக்கறிஞர் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளை யோகி ஆதித்தியநார் அரசு இடித்து தள்ளிய சம்பவம் மனசாட்சியை உலுக்கும் விதமாக இருப்பதாக உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. பொதுவாக அரசு நிலத்தை, சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டும் கட்டுமானங்களை நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இடித்து அப்புறப்படுத்துவது வாடிக்கையான ஒன்று தான்.
ஆனால், உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு புல்டோஸர் கலாசாரம் என்னும் புதிய கலாச்சாரம் தலை தூக்கி பாஜக ஆளுகின்ற பிற மாநிலங்களுக்கும் அந்த கலாச்சாரம் பரவி வருவது கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. குற்றச்சாட்டப்பட்டவர்கள் வழக்குகளில் குற்றவாளிகளாக தீர்ப்பு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வீடுகளை புல்டோஸர் கொண்டு சட்டவிரோதமான முறையில் இடித்து தரைமட்டமாக்கும் நடவடிக்கையை யோகி ஆதித்தியநாத் அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்குகளில் குற்றவாளிகளாக தீர்ப்பு அளிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு சட்ட விரோதன முறையில் இடித்து தரைமட்டமாக்கும் நடவடிக்கையை யோகி ஆதித்தியநாத் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரயாக்ராஜ் நகரில் தனிநபரின் நிலத்தை ஆக்கிரமித்ததாக 2 கைம்பெண்கள் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளை உத்தரப்பிரதேச அரசு இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் உச்சநீதிமன்றத்தால் கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.
பிரபல ரவுடிக்குச் சொந்தமான நிலத்தில் 5 பேரின் வீடுகளும் கட்டப்பட்டதாக மாநில அரசின் வாதம். ஆனால், சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், நோட்டீஸ் கொடுத்த 24 மணிநேரத்தில் 5 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ள உச்சநீதிமன்றம், அங்கு வீடுகளை மீண்டும் கட்ட அனுமதி அளிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன் உத்திரப்பிரதேச அரசின் நடவடிக்கை நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்குவதாகவும் கூறியுள்ளது. குற்றம் சட்டப்பட்டோர் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்காமல் வீடுகளை இடிப்பதா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
The post புல்டோஸர் கலாசாரம்.. உ.பி. அரசின் நடவடிக்கை நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்குகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம்!! appeared first on Dinakaran.