டெல்லி: புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் உள்ளதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுட்டுள்ளது. ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளில் ரூ.500 நோட்டு முதன்மையாக உள்ளது.இந்நிலையில் நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி என ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதில்,
*தரம், அச்சில் அசல் ரூ.500 நோட்டிற்கு கொஞ்சமும் குறையாமல் உள்ள கள்ள நோட்டில் ஒரு எழுத்து மாறி இருக்கும்.
*கள்ளநோட்டில் RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் E-க்கு பதில் A இருப்பதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது.
*வங்கிகள், செபி, சிபிஐ, என்ஐஏ உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது.
The post புழக்கத்தில் புது வகை ரூ.500 கள்ள நோட்டு: எச்சரிக்கையாக இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.