புதுடெல்லி: டெல்லி பேஷன் ஷோ ரேம்பில் 2 ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். தலைநகர் டெல்லியின் பாரத் மண்டபத்தில் நடந்த அஷ்டலட்சுமி ஃபெஸ்டிவல் பேஷன் ஷோவில், பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். திடீரென யாரும் எதிர்பாராத நிலையில், பேஷன் ஷோ ரேம்பில் ஒன்றிய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மற்றொரு ஒன்றிய அமைச்சர் சுகந்தா மஜூம்தாரும் ஒய்யாரமாக நடந்து காட்டினர். ஜோதிராதித்ய சிந்தியா கிரீம் நிற கோட்டும், கழுத்தில் சிவப்பு நிற மஃப்ளர் அணிந்திருந்தார்.
சுகந்தா மஜூம்தாரும் கிரீம் நிற கோட்டும், கழுத்தில் சிவப்பு துண்டும் அணிந்திருந்தார். ஒன்றிய அமைச்சர்கள் இருவரும் பேஷன் ஷோவில் கலந்து கொண்டதை சிலர் வரவேற்றாலும், பெரும்பாலான சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். ‘மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக இதுபோன்ற விளம்பர பேஷன் ஷோக்களில் ஜாலியாக போஸ் கொடுக்கத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்களா?’ என்ற கோணத்தில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
The post பேஷன் ஷோ ரேம்பில் 2 ஒன்றிய அமைச்சர்கள்: நெட்டிசன்கள் விமர்சனம் appeared first on Dinakaran.