டெல்லி: பொன்னியின் செல்வன் பட விவகாரத்தில் ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்பட பாடலில் வந்த வீர ராஜ வீர பாடல் தனது தந்தை மற்றும் உறவினர் இசையமைத்த சிவா ஸ்துதி பாடலின் காப்பியாக இருப்பதாக கூறி கர்நாடக இசைப்பாடகர் ஹயாஸ் ஜாபர் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த பாடல் இன்ஸ்பயர் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் வீர ராஜ வீர பாடல் சிவா ஸ்துதி பாடலை போலவே உள்ளது எனவே ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழு தரப்பு ரூ.2 கோடியை டெல்லி உயர்நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதே போல் பாடகர் டாகர் தரப்பிற்கு மனுதாரர்கள் தரப்பு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து உத்தரவிட்டது.
சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன் உந்துதலால் வீரா ராஜ வீரா பாடலின் இசையை இயற்றினேன் என ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் அதனையும் நீதிபதிகள் தற்போது உத்தரவில் பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் காப்புரிமை விவகாரத்தில் ரூ.2 கோடியை டெல்லி உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பு தாக்கல் செய்வதற்கான உத்தரவை டெல்லி நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பாக வழங்கினர்.
The post பொன்னியின் செல்வன் பட விவகாரம்: ரூ.2 கோடி செலுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.