திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாம்பள்ளியில் தனியார் பொருட்காட்சி நடந்து வருகிறது. நேற்று காணும் பொங்கல் என்பதால் குடும்பத்துடன் பலர் வந்திருந்தனர். இரட்டை ராட்டினத்தில் பலர் ஏறி அமர்ந்தனர். சில நிமிடங்கள் ராட்டினம் மேலே சென்றும் தலைகீழாக சுற்றியும் வந்தது. அதில் இருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் திடீரென தொழில்நுட்ப கோளாறால் தலைகீழாக அந்தரத்தில் நின்றுவிட்டது. இதனால் அலறி துடித்தனர். மேலும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த உறவினர்களும் பதறினர்.
இதையடுத்து சிறப்புக்குழு விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி சரி செய்தனர். அதன் பின்னர் அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியே வந்தனர். இவர்களில் பலர் பயத்தால் மயங்கினர். சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து ராட்டினத்தையும் ஆய்வு செய்யுமாறு காவல்துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
The post பொருட்காட்சியில் ராட்டினம் கோளாறு: 20 நிமிடம் தலைகீழாக தொங்கிய மக்கள் appeared first on Dinakaran.