புதுடெல்லி: ‘டார்க் வெப், கிரிப்டோகரன்சி, ஆன்லைன் சந்தை மற்றும் டிரோன்கள் ஆகியவை நாட்டிற்கு தொடர்ந்து சவாலாக உள்ளன’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய ஒன்றிய உள்துறை அமித்ஷா பேசியதாவது: ஒரு கிலோ போதைப்பொருள் கூட நாட்டிற்குள் அல்லது வெளியே கடத்த அனுமதிக்க முடியாது.
போதைப்பொருட்களின் நெட்வொர்க்கை ஒழிப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. அதோடு, போதைப்பொருளுடன் தொடர்புடைய பயங்கரவாதமும் அழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், டார்க் வெப், கிரிப்டோகரன்சி, ஆன்லைன் சந்தை, டிரோன்கள் ஆகியவை இன்றும் நமக்கு சவாலாக உள்ளது. போதைக்கு அடிமையான இளம் தலைமுறையுடன் எந்த நாடும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற முடியாது. இந்த சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடி இந்தப் போரில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது நமது பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
The post போதைப்பொருள் ஒழிப்பில் வெற்றி டார்க் வெப், கிரிப்டோகரன்சி தொடர்ந்து சவாலாக உள்ளன: அமித் ஷா பேச்சு appeared first on Dinakaran.