சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். மிகுந்த பரபரப்பான இந்தச் சம்பவத்தில் நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம்.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ரூ.276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செயய்க் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.