சென்னை: அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை மே 7 முதல் மே 14 வரை அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
மேலும், பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலி அல்லது பிஎஸ்என்எல் இணையதளம் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் எஸ்டிவி-599, பிவி-997 மற்றும் பிவி-2399 ஆகிய மொபைல் ப்ரீபெய்டு திட்டங்களில் 5 சதவீத தள்ளுபடியைப் பெற முடியும். அதோடு நீண்ட கால மொபைல் ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடிக் காலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது: