மகாகும்ப நகர்: “மகாசிவராத்திரி அன்று மகாகும்பமேளாவில் மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது” என உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதியன்று மகாகும்பமேளா தொடங்கியது. வரும் 26ம் தேதி மகாசிவராத்திரி தினத்தன்று மகாகும்பமேளா நிறைவடைகிறது. 45 நாள்கள் நடைபெறும் இந்த ஆன்மீக நிகழ்வில் இதுவரை 59 கோடி பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகாசிவராத்திரி தினத்தில் பக்தர்கள் புனித நீராட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “26ம் தேதியன்று புனித நீராட வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மகாகும்பமேளாவின் புனிதத்தை கெடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
The post மகாகும்பமேளா மகாசிவராத்திரியில் புனித நீராட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: உ.பி. அரசு தகவல் appeared first on Dinakaran.