புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட ஆப்ஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரான மாஜி முதல்வர் உட்பட 21 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சட்டீஸ்கரில் ரூ.6 ஆயிரம் கோடி மகாதேவ் ஆப் மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ராய்ப்பூர் மற்றும் பிலாயில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மேலும் பூபேஷ் பாகலின் நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
துர்க் மாவட்டத்தின் பிலாயில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ தேவேந்திர யாதவ், ஐபிஎஸ் அதிகாரிகள் அனந்த் சாப்ரா, அபிஷேக் பல்லவா மற்றும் ஆரிவ் ஷெயிக் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் இன்று சிபிஐ வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம் தொடர்பாக சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் உட்பட மொத்தம் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் அடையாளம் தெரியாத நபர்கள் ஆவர்.
இவர்கள் மீது சட்டப் பிரிவவுகள் 120 (பி), 420, 467, 468; சத்தீஸ்கர் சூதாட்ட (தடை) சட்டம், 2002 இன் வழக்குபதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களின் தொடர்புடைய அரசுியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், மகாதேவ் செயலியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மகாதேவ் சூதாட்ட ஆப்ஸ் விவகாரம்; மாஜி முதல்வர் உட்பட 21 பேர் மீது வழக்கு: சிபிஐ அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.