கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 10 பேரை பிப்.17-ம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 10 மீனவர்களை கைது செய்து ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
The post மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு பிப்.17-ம் தேதி வரை சிறையிலடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.