சென்னை: தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மதுரை – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டு வரும் அமிர்த பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை அமைச்சர அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.