நல்பாரி: அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் போரோலியாபாரா பகுதியை சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது. இவரது மனைவி வேறொருவருடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். மாணிக் அலி பலமுறை அறிவுரை கூறியும் அவரது மனைவி திருந்தவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் மூலம் 2 தினங்களுக்கு முன் விவாகரத்து கிடைத்தது. இதை அறிந்ததும் மாணிக் அலி மகிழ்ச்சியில் மாணிக் அலி, 40 லிட்டர் பாலை 4 பக்கெட்களில் ஊற்றி தனக்கு தானே பாலாபிஷேகம் செய்து குளித்தார். இந்த பால் குளியல் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி உள்ளது.
The post மனைவியின் டார்ச்சரில் இருந்து விடுதலை விவாகரத்து கிடைத்ததும் 40 லிட்டர் பாலில் குளியல்: அசாமில் கணவன் வைரல் சம்பவம் appeared first on Dinakaran.