மும்பை: மராட்டிய மாநிலத்தில் கிளான் பரே தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளான் பரே என்பது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே நரம்புகளை தாக்கி அழிக்கக் கூடிய அரிய நோய் ஆகும். கிளான் பரே தொற்று ஏற்பட்டால் கை, கால்கள் பலவீனமாகி பின்னர் ஒட்டுமொத்த உடலும் பலவீனமாகிவிடும். நோய் வருவதற்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில் நோய் பாதிக்கும் முன் சுவாசக் கோளாறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கிளான் பரே தொற்றால் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post மராட்டிய மாநிலத்தில் கிளான் பரே தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.