மும்பை: மராட்டிய மாநிலத்தில் கிளான் பரே தொற்றால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளான் பரே என்பது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே நரம்புகளை தாக்கி அழிக்கக் கூடிய அரிய நோய் ஆகும். கிளான் பரே தொற்று ஏற்பட்டால் கை, கால்கள் பலவீனமாகி பின்னர் ஒட்டுமொத்த உடலும் பலவீனமாகிவிடும். நோய் வருவதற்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில் நோய் பாதிக்கும் முன் சுவாசக் கோளாறு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கிளான் பரே தொற்றால் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜன.18-ம் தேதி இருமல் சளி, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று உயிரிழந்தார். ஆண்கள் 68 பேர் பெண்கள் 33 பேர் என மொத்தம் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கைகள் அல்லது கால்களில் திடீர் பலவீனம், பக்கவாதம் ஏற்படும். வயிற்றுப்போக்கு தொடர்ந்து இருக்கும்.
* இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு மாநில அளவிலான விரைவு மீட்புக் குழு உடனடியாகச் சென்று பார்வையிட வேண்டும். புனே எம்சி மற்றும் ஊரக மாவட்ட அதிகாரிகளுக்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளிடமிருந்து மொத்தம் 23 ரத்த மாதிரிகள் என்ஐவிக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து மாதிரிகள் சோதனையிலும் ஜிகா, டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு இல்லை.
11 மல மாதிரிகள் என்ஐவி புனேவுக்கு அனுப்பப்பட்டன. அனைத்தும் என்ட்ரிக் வைரஸ் பேனலுக்கு சோதிக்கப்பட்டன. அவர்களில் 9 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாக்டீரியா தொற்றுக்காக 3 மல மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கேம்பிலோபாக்டர் ஜெஜூனிக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டது.
* பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்
தண்ணீரின் தரம் நன்றாக இருக்க கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேகவைத்த தண்ணீரைக் குடிப்பது நல்லது. உணவு புதியதாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். சமைத்த மற்றும் சமைக்காத உணவுப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வைக்காமல் இருப்பதன் மூலமும் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். பொதுமக்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
The post மராட்டிய மாநிலத்தில் கிளான் பரே தொற்றால் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.