டெல்லி: மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
தேயிலைத் தோட்டத்தை அரசு கையகப்படுத்தி மீண்டும் வனப்பரப்பாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இங்கு, வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது . மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் வனத்தை தவிர வேறு பயிர் சாகுபடி, தோட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கிறதா என ஆய்வு நடத்தி 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.