நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து நொய்டாவில் உள்ள உஜ்வால் கிஷோர் என்பவரது வீட்டில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதில் உஜ்வாலும், அவரது மனைவி நீலுவும் சேர்ந்து சைப்ரஸ் நாட்டை சேர்ந்த டெக்னிஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து ஆபாச வீடியோ இணைய தளங்களை நடத்தி வந்தது தெரியவந்தது. இதற்காக சட்டவிரோதமாக 15.66 கோடி வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தம்பதி உள்ளிட்ட சிலரை அமலாக்கத்துறை கைது ெசய்து வருகிறது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘உஜ்வால் இதற்கு முன்பு ரஷ்யாவில் இதே தொழிலை செய்து வந்தார். அதன்பிறகு இந்தியாவிற்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது மனைவியுடன் சேர்ந்து இத்தொழிலை செய்து வந்துள்ளார். இவர்கள் தங்களுக்கு தேவையான மாடல் அழகிகளை பேஸ்புக் மூலம் தேர்வு, இதற்காக பிரத்யேகமாக ‘echato.com’ என்ற இணைய பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் மாடலிங் வாய்ப்பு கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த விளம்பரங்களை பார்த்து பல பெண்கள் மாடலிங் வாய்ப்பு தேடி அவர்களது வீட்டிற்கு வந்தனர். அவர்களிடம் மாடலிங் ஒத்திகை கற்றுத் தருவதாகவும் கூறியுள்ளனர். அவர்களது வீட்டிலேயே ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பு செய்வதற்காக பிரத்யேக ஸ்டூடியோ வைத்துள்ளனர். அங்கு 24 மணி நேரமும் 3 பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். மாடலிங் ஒத்திகைக்கு வரும் பெண்களிடம் ஆன்லைன் ஆபாச வீடியோவில் நடித்தால் மாதம் ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை தங்களது வலையில் விழவைத்துவிடுகின்றனர்.
அவ்வாறு தங்களது வலையில் விழும் பெண்களிடம் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க ஆபாச வீடியோக்களை எடுத்து ஆன்லைனில் வெளியிட்டனர். பாதி முகத்தை மூடியபடி, முழு முகத்தை காட்டுதல், முழு நிர்வாணமாக காட்டுதல் என பல பிரிவுகளில் அப்பெண்களுக்கு வேலை கொடுக்கப்படும். மேலும் இந்த வீடியோக்களை ஆன்லைனில் பார்க்க வாடிக்கையாளர்களிடம் பணம் கட்டி டோக்கன் வாங்கும்படி கூறுகின்றனர். இதில் கிடைக்கும் வருமானத்தில் 75 சதவீதத்தை தம்பதிகள் வைத்துக்கொண்டு 25 சதவீத தொகையை மாடல் அழகிகளுக்கு கொடுத்து வந்துள்ளனர்.
இந்த மோசடி மூலம் மொத்தம் ரூ.22 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி உள்ளனர். வீட்டில் ரெய்டு நடத்திய போது அங்கு ரூ.8 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஷூட்டிங் எடுத்துக் கொண்டிருந்த மூன்று மாடல் அழகிகளும் இருந்தனர். தொடர் விசாரணையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் தொழிலில் தள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post மாடலிங் கற்றுத் தருவதாக கூறி 400 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து இணைய தளத்தில் வௌியிட்ட தம்பதி appeared first on Dinakaran.