திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று மது கொடுத்து 2 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 14ம் தேதி மாணவி பள்ளிக்கு வரவில்லை. தொடர்ந்து வகுப்பு ஆசிரியை மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதையடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் மாணவியை அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் வீட்டில் இருந்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தலப்புழா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது 2 பேர் வீட்டுக்கு வந்து மாணவியை மிரட்டி குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் மனைவியை கடத்திச் சென்றது அருகிலுள்ள தவிஞ்ஞால் பகுதியை சேர்ந்த முகம்மது ஆஷிக் (25), ஜெயராஜன் (26) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 2 பேரும் சேர்ந்து மாணவியை வீட்டிலிருந்து கடத்தி அங்குள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று மது கொடுத்து மயக்கி பலாத்காரம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு மாணவியை அவர்கள் வழியில் இறக்கி விட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.