டெல்லி: தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு பேசியபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ஆளுநர் குறித்து பேச காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் செயல்பாடு குறித்து திமுக எம்.பி. கனிமொழி சோமுவை பேச விடாமல் பாஜகவினர் முழக்கமிட்டனர். சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒவ்வொரு முறையும் அவமதித்து வருவதாக திமுக எம்.பி. குற்றச்சாட்டியது. சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் குறித்து ஏன் பேசக்கூடாது என மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல் சாசனத்துக்கு எதிராக நடந்து கொள்ளும் ஆளுநர்கள் குறித்து பேசக் கூடாதா? என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.
The post மாநிலங்களவையில் ஆளுநர் குறித்து பேச காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு..!! appeared first on Dinakaran.