புதுடெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222ல் 500 ரூபாய் நோட்டுக்கள் 100 எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்ததை அடுத்து, பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து பாதுகாப்பு ஊழியர்களால் ரூபாய் நோட்டு கட்டு ஒன்று நேற்று (டிச. 5) கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. 500 ரூபாய் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவைக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை. எனவே தெரிவித்துள்ளேன்.