டெல்லி: மாலத்தீவுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதியுதவி ரூ.4,883 கோடியிலிருந்து ரூ.5,483 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.20,516 கோடி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மாலத்தீவுக்கு ரூ.600 கோடியும், பூடானுக்கு ரூ.2,150 கோடியும் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
The post மாலத்தீவுக்கு நிதியுதவியாக ரூ.600 கோடியை இந்தியா வரும் நிதியாண்டில் வழங்கவுள்ளது: வெளியுறவுத்துறை appeared first on Dinakaran.