புதுடெல்லி: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா(79)டெல்லி தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையராகவும் பின்னர் 2009ம்ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை 2010ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராகவும் இருந்தார். நவீன் சாவ்லா மூன்றாம் பாலின வாக்காளர்களுக்கான முக்கிய சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தவர். முதல்வர் இரங்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘‘முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தேர்தல் முறையை வலுப்படுத்துவதில் அவரது பதவிக்காலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கண்டது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.
The post முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மறைவு appeared first on Dinakaran.