மும்பை: மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்லா நகரில் நேற்று இரவு 9.40 மணியளவில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு அந்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கார்கள், பைக்குகள், ஆட்டோக்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது.
விபத்து ஏற்படுத்திய அந்த பேருந்து சுமார் 200மீட்டர் தூரத்திற்கு சென்று குடியிருப்பு ஒன்றில் வாயில் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டிய அரசின் பேஸ்ட் நிறுவனம் எலைட் என்ற நிறுவனத்துடன் இணைந்து மும்பை மாநகரம் முழுவதும் மின்சார பேருந்துகளை இயக்கி வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்த பேருந்துகளின் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு ஏற்பட்ட கோர விபத்தால் மின்சார பேருந்துகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post மும்பையில் அரசுப் பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு; 49 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.