மும்பை: குர்லா ரயில் நிலையம் அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது மோதியதில் 6 பேர் பலியாகினர். குர்லா மற்றும் அந்தேரி இடையே செல்லும் பேருந்து மோதியதில் பலத்த காயம் அடைந்த 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் பிரேக் சிஸ்டம் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது மோதியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 3 மாதங்களுக்கு முன்புதான் மின்சார பேருந்துகளின் சேவை துவக்கி வைக்கப்பட்டது.
The post மும்பையில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து வாகனங்கள் மீது மோதியதில் 6 பேர் பலி appeared first on Dinakaran.