அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 9-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 36 ரன்களில் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. 197 ரன்கள் இலக்கை மும்பை விரட்டி இருந்தது. ஆட்டத்தில் சவால் இருந்த நிலையில் குஜராத் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர்.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.