மும்பை. : கோவாவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் சில மணி நேரத்தில் வெடித்து சிதறும் என இமெயில் ஒன்று நேற்று முன்தினம் வந்தது. இது குறித்த தவலின்பேரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு படையினர் மும்பை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். பயணிகள் மற்றும் விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இச்சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மும்பை – கோவா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.