மும்பை: மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர் என சயீப் அலிகான் வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் வேதனை தெரிவித்துள்ளார். மும்பை பாந்த்ரா பகுதியில் சத்குரு ஷரணில் உள்ள 12வது மாடி வீட்டில் நடந்த கொள்ளை முயற்சியின் போது, சைஃப் அலி கானை ஒரு நபர் கத்தியால் குத்தி தாக்கினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மும்பை காவல் துறையினர் சிசிடிவியில் பதிவான நபரை தனிப்படைகளை அமைத்து தேடிவந்தனர்.
அப்போது கொல்கத்தா ஷாலிமார் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸின் ஓட்டுநர் ஆகாஷ் கனோஜியா
குற்றவாளியின் ஒத்த அடையாளத்துடன் இருந்ததால் சத்தீஸ்கரில் உள்ள துர்க்கில் சயீப் அலிகான் மீதான தாக்குதலில் சந்தேகிக்கப்பட்ட நபராக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, ஜனவரி 19 ஆம் தேதி மும்பை காவல்துறையினர் வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரிபுல் இஸ்லாமை கைது செய்தனர், பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆகாஷை விடுவித்தனர்.
ன சந்தேகத்தின் பேரில் கைதாகி விடுவிக்கப்பட்ட ஆகாஷ் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர். டிவியில் புகைப்படங்கள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டது. குடும்பமே அவமானத்தை சந்திக்கிறது. எனக்கு நீதி வேண்டும். சயீப் அலிகானுக்கு நடந்த தாக்குதலால், நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவரது வீட்டுக்கு முன்பு நின்று வேலை கேட்கப்போகிறேன். என தெரிவித்தார்.
The post மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர்: சயீப் அலிகான் வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட நபர் வேதனை appeared first on Dinakaran.