டெல்லி: மொழி கொள்கை சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தி மற்றும் தமிழ் தொடர்பாக மொழியியல் அறிஞர் பெக்கி மோகன் அதிர்ச்சிக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார். பல பிராந்திய மொழிகளை இந்தி விழுங்கியது போல் தமிழ் உள்ளிட்ட மொழிகளால் பழங்குடியின மொழிகள் அழிந்துள்ளதாக பெக்கி மோகன் என்ற மொழியியல் அறிஞர் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களில் மைதிலி போன்ற மொழிகளை இந்தி விழுங்கி விட்டதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், மொழியியல் அறிஞரின் கருத்து வெளியாகியுள்ளது.
ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பெக்கி மோகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியாவில் பயன்பாட்டில் இருந்த பழங்குடியினத்தவரின் மொழிகள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட மொழிகளாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஊக்குவிப்பதால் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்றும் பெக்கி மோகன் கூறியுள்ளார். மொழிக்கொள்கை விவகாரத்தில் எதை கற்பது என்பதை சந்தையும், தொழில்நுட்பமுமே தீர்மானிக்க வேண்டும் என்றும், அரசியல்வாதிகள் அல்ல எனவும் பெக்கி மோகன் தெரிவித்துள்ளார்.
The post மும்மொழிக்கொள்கையை ஊக்குவிப்பதால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது: மொழியியல் நிபுணர் கருத்து appeared first on Dinakaran.