டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பில் கேரளா ஒத்துழைக்க மறுப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்துள்ளது. அணையை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள கேரளா முட்டுக் கட்டையாக உள்ளது. அணையில் எந்த புனரமைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள கேரளா தடையாக உள்ளது. அணை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றமே நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். பேபி அணையை பலப்படுத்துதல், புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்பது ஏற்கனவே முடிந்துபோன விவகாரம். அணையை பலப்படுத்தும் விவகாரம் குறித்த வழக்கை மட்டும் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை பிப்.19க்கு ஒத்திவைத்தது.
The post முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பில் கேரளா ஒத்துழைக்க மறுப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புகார் appeared first on Dinakaran.