சிர்சா: அரியானா மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா திடீர் மாரடைப்பால் குருகிராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சவுதாலாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான சிர்சா மாவட்டம் தேஜா கேரா கிராமத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார், அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் மற்றும் அரியானா மாநில அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் சவுதாலா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன் சவுதாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
The post முழு அரசு மரியாதையுடன் அரியானா மாஜி முதல்வர் ஓ.பி.சவுதாலா உடல் தகனம் appeared first on Dinakaran.