செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது ஏதாவது புதுமையான விஷயங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. ‘ப்ராம்ப்ட்’ எனப்படும் கட்டளைகளை ஏஐயிடம் சொன்னால் போதும் அது வாக்கியங்களை அமைப்பது, ஒளிப்படங்களை உருவாக்குவது எனத் தொடங்கி தற்போது வீடியோவையும் உருவாக்கித் தருகிறது.
அப்துல் கலாம் – ரத்தன் டாடா பேசிக் கொள்வது போலவும், ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது போலவும், பூனைக் கூட்டம் சுட்டித்தனம் செய்வது போலவும் எனக் கற்பனைக்கு எட்டும் விஷயங்களையெல்லாம் ஏஐயிடம் பேசி வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.