புதுடெல்லி: டெல்லி ஆளுநர் சக்சேனா கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஒரு அரசு சாரா நிறுவனத்திற்கு தலைவராக இருந்தபோது நர்மதா பச்சவர் அந்தோலன் தலைவர் மேதா பட்கருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மேதா பட்கர் குற்றவாளி என்று கூடுதல் அமர்வு நீதிபதி விஷால் சிங் உத்தரவிட்டார். கடந்த 8ம் தேதி நன்னடத்தை அடிப்படையில் அவரை விடுவித்து ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று பட்கர் நன்னடத்தை பத்திரத்தை சமர்பிக்கவும், அபராதத்தொகையை செலுத்தவும் வழக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் மேதா பட்கரோ அல்லது அவரது வழக்கறிஞரோ ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து மேதா பட்கருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
The post மேதா பட்கருக்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.