சென்னை: மோசமான வானிலையால் பெங்களூருவில் தரையிறங்க வேண்டிய 3 விமானங்கள் சென்னை வந்து தரையிறங்கின. பெங்களூரில் மாலையில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து, மோசமான வானிலை நிலவியது. சென்னையில் இருந்து 142 பேருடன், பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. கோவாவில் இருந்து 150 பேருடன் சென்ற விமானம், அந்தமானில் இருந்து சென்ற விமானமும் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன.
The post மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திரும்பிய 3 விமானங்கள் appeared first on Dinakaran.