டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 30 நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பற்றி எரிந்த வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்திற்கே அவரை பணிமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை பொது தளத்தில் வெளியிட முடிவு செய்தனர். அவர்கள் தெரிவிக்கும் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் கண்ணா உள்ளிட்ட 30 நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டனர்.
The post யஷ்வந்த் வர்மா சர்ச்சை: சொத்து விவரங்களை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்!! appeared first on Dinakaran.