திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 84,198 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,665 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.94 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
ஆழ்வார் திருமஞ்சனம்
யுகாதி பண்டிகை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் நாளை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மை பணி) நடைபெற உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்படும். 11மணிக்கு பிறகு வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் 25 மற்றும் 30ம்தேதி ஆகிய 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
The post யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்: 4 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.