மும்பை: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாக கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.