கீவ்: உக்ரைனில் பயணிகள் பேருந்து மீது ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே முதல் நேரடி அமைதிப்பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்ற சில மணி நேரங்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தி உள்ளது. ரஷ்யாவுடனான எல்லையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள சுமியின் பிலோபிலியா நகர் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ரஷ்யாவின் மற்றொரு போர்க்குற்றம் என உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
The post ரஷ்யாவின் மற்றொரு போர்க்குற்றம்; உக்ரைன் பயணிகள் பஸ் மீது டிரோன் தாக்குதல்: 9 பேர் பலி appeared first on Dinakaran.