ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 9 வயது மாணவி மாரடைப்பால் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் சிக்கரின் டான்டா நகரில் பிராச்சி குமாவத் என்ற 9 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போலவே நேற்று முன்தினம் தேதி பள்ளிக்கு சென்றார். காலை முதல் ஆரோக்கியமாக இருந்தார். மதிய உணவு இடைவேளையின்போது உணவருந்த அமர்ந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் சக மாணவிகள் அதிர்ச்சியடைந்து பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். உடனே அவர்கள் அலறியடித்து ஓடி வந்து மாணவியை அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எவ்வளவோ முயன்றும் பலனளிக்கவில்லை. இறந்து விட்டார். பரிசோதனையின்போது அவருக்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர் சுபாஷ் வர்மா, ‘ஒரு நோயாளியை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், இது பிறவி இதய நோயாகக்கூட இருக்கலாம். பெற்றோர்கள் அதை கவனிக்காமல் இருக்கலாம். அதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என்றார்.
The post ராஜஸ்தானில் பள்ளியில் நடந்த சோகம்: 9 வயது மாணவி மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.