ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 9 அன்று கடலுக்குச் சென்ற டல்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி படகை சிறைப்பிடித்து, படகிலிருந்த 7 மீனவர்களை கைது செய்தனர்.