மும்பை: நடிகை ராஷ்மிகாவுக்கும் எனக்கும் 31 வயது வித்தியாசம் இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்னையா? சல்மான் கான் கோபத்துடன் கேட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் – நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் 59 வயதான சல்மான் கானுக்கும், 28 வயதான ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய ட்ரோலிங் இருந்தது. இதுகுறித்து சல்மான் கான் கூறுகையில், ‘எனக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே 31 வயது வித்தியாசம் உள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்படுகிறது.
இவ்விவகாரத்தில் என்னுடன் நடித்த கதாநாயகி ராஷ்மிகாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; அவருடைய அப்பாவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி இருக்கையில் உங்களுக்கு (நெட்டிசன்கள்) மட்டும் ஏன் பிரச்னையாக இருக்கிறது? ராஷ்மிகாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை பிறந்தால், நான் அவருடனும் நடிப்பேன். இதில் ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், அவருடைய அம்மாவின் (ராஷ்மிகா) அனுமதி அளிக்க வேண்டும்’ என்று புன்னகையுடன் கூறினார். அப்போது மேடையில் இருந்த ராஷ்மிகா, சல்மான் கான் இவ்வாறு சொன்னதும் வெட்கத்துடன் சிரித்தார். மேடையில் இருந்தவர்களும் சிரித்தனர்.
The post ராஷ்மிகாவுக்கும், எனக்கும் 31 வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா?.. நடிகர் சல்மான் கான் கோபம் appeared first on Dinakaran.