டெல்லி: திருச்சி மதுரை இடையிலான 124 கிலோ மீட்டர் தூர 4 வழிச்சாலையை பராமரித்து சுங்கம் வசூலிக்கும் உரிமத்தை பெற ஒன்றிய அரசுக்கு 1692 கோடி செலுத்த அதானி நிறுவனம் முன்வந்துள்ளது. திருச்சியிலிருந்து துவரங்குறிச்சி வழியாக மதுரை வரையிலான 124 கிலோ மீட்டர் நெடுஞ்சசாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. இச்சாலை பராமரிக்கும் பொறுப்பை தனியாருக்கு குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ள நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆண்டு டெண்டர் கோரியது. அதற்கான ஏலத்தில் அதானி ரோடு டிரான்ஸ்போர்ட், IRB INFRASTRUCTURE DEVELOPERS LTD, எபிக் கன்ஸ்ட்ரக்ஷன், PRAKASH ASPHALTINGS & TOLL HIGHWAYS (INDIA) LTD நிறுவனங்கள் பங்கேற்றன.
திருச்சி-மதுரை சாலையை பராமரிப்பதுடன் சுங்கம் வசூலித்து கொள்ளும் உரிமையை பெறுவதற்காக அதானி நிறுவனம் ஒன்றிய அரசுக்கு ரூ. 1692 கோடி செலுத்த முன்வந்துள்ளது. பிற நிறுவனங்களை காட்டிலும் அதானி நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரி இருப்பதால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அந்த நெடுஞ்சாலையை பராமரிக்கும் உரிமம் அதானி நிறுவனத்திற்கே வழங்கப்படலாம் ஏன் தெரிகிறது. ஏற்கனவே மதுரை- கன்னியாகுமாரி இடையிலான 243 கிலோ மீட்டர் சாலை தனியார் மயமாக்கப்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தவிர திருச்சி- தஞ்சாவூர் இடையிலான 56.5 கிலோமீட்டர் நீலநெடுஞ்சாலை, மதுரை- தூத்துக்குடி இடையிலான நெடுஞ்சாலை மற்றும் தூத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலையை குத்தகைக்கு விடுவதற்கான டெண்டரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோரியுள்ளது. இந்த வரிசையில் தற்போது 32.6 கி.மீ நீளமுள்ள சென்னை பைபாஸ் சாலையையும் தனியார்மயமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post ரூ.1,692 கோடிக்கு நெடுஞ்சாலையை பராமரிக்க முன்வந்த அதானி நிறுவனம்: 20 ஆண்டுகளுக்கு சாலையை பராமரித்து சுங்கம் வசூலிக்க திட்டம் appeared first on Dinakaran.