லண்டன்: இங்கிலாந்தின் ஒல்டு டிராஃபோர்டில் புதிய மைதானத்தை மான்செஸ்டர் யுனைடெட் என்ற கால்பந்து கிளப் கட்டுகிறது. ஒரு லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் ரூ.22,580 கோடியில் புதிய கால்பந்து மைதானத்தை கட்டுகிறது. ஓல்டு டிராஃபோர்டில் ஏற்கனவே உள்ள கால்பந்து மைதானம் அருகிலேயே புதிய மைதானம் கட்டப்பட உள்ளது. புதிய கால்பந்து மைதானம் அமைக்கப்படுவதால் 92,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். புதிய கால்பந்து மைதானம் கட்டப்படுவதால் புதிதாக 17,000 வீடுகளும் கட்டப்படும் என்று மான்செஸ்டர் யுனைடெட் விளக்கம் அளித்துள்ளது. கால்பந்து மைதானம் பிரிட்டனில் ரூ.82,925 கோடி மதிப்பிலான பொருளாதார நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ரூ.22,580கோடியில் மைதானம் கட்டுகிறது கால்பந்து கிளப் appeared first on Dinakaran.