டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் பொதுத்துறை வங்கிகளின் ரூ.42,035 கோடி வாராக்கடன் கணக்கு பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வாராக்கடன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் வசூலிக்க முடியாவிட்டால் கணக்கு பதிவில் இருந்து நீக்குவது வழக்கம். வங்கியின் நிர்வாக காரணங்களுக்காக கணக்கு பதில் இருந்து நீக்கம், கடன் தள்ளுபடியாக கருதப்படமாட்டாது. இதே காலகட்டத்தில் ரூ.37,253 கோடி வாராக்கடன் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
The post ரூ.42,000 கோடி வாராக்கடன்-கணக்கில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.