டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வக்ஃபு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. வக்ஃபு சொத்தை ஒருவர் பதிவு செய்ய வரும்போது அது அரசு நிலம் என்று கூறினால் என்ன நடக்கும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். வக்ஃபு சொத்து என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய ஏன் அனுமதிக்கக்கூடாது? என்றும் வக்ஃபு சொத்தை மாவட்ட ஆட்சியர் முடிவு செய்வது நியாயமானதா? எனவும் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
The post வக்ஃபு சட்ட வழக்கில் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.